இந்திய உணவு கலாச்சாரம் நம்மை நம் பாரம்பரியத்தோடு இணைக்கும் நெஞ்சை நெகிழ வைக்கும் சுவைகளால் நிறைந்த ஒன்று மழைக்காலங்களில் டீ – சமோசா சாப்பிடுவது.. ஆனால், நாம் நேசிக்கும் இத்தனை பாரம்பரிய உணவுகள் அனைத்தும் உடல் நலனுக்கு சிறந்தவை என்று சொல்ல முடியாது.
நம்முடைய சில விருப்பமான இந்திய உணவு சேர்க்கைகள் மெதுவாக குடல் ஆரோக்கியத்தை பாதிக்கவும், ஜீரணத்தை மந்தமாக்கவும் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தார்.. சிக்கல் பொருட்களில் இல்லை, அவை ஜீரண அமைப்புக்குள் எப்படி செயல்படுகின்றன என்பதில்தான் உள்ளது.
ஒவ்வொரு உணவும் தனித்தனி ஜீரண வேகமும் தேவையும் கொண்டவை. இவை ஒன்றோடொன்று பொருந்தாத முறையில் சேர்க்கப்பட்டால், வயிற்றுப் பெருக்கு, அமிலத்தன்மை, சோர்வு, மேலும் சத்துகள் சரியாக சீராக உடலில் உறிஞ்சப்படாத நிலை உருவாகலாம்.
இங்கே, உங்கள் குடல் ஆரோக்கியத்தை அமைதியாக பாதிக்கக்கூடிய 5 பொதுவான இந்திய உணவு சேர்க்கைகளும், அவற்றுக்கான ஆரோக்கியமான மாற்றுகள் குறித்தும் பார்க்கலாம்..
சப்பாத்தி மற்றும் பருப்பு டால்:
இவை இரண்டும் இந்திய இல்லங்களின் பிரதான உணவுகள். இவை நார்ச்சத்து மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தவை. ஆனால், இரண்டையும் ஒரே நேரத்தில் அதிக அளவில் சாப்பிடும்போது ஜீரணத்திற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும்.
இரண்டும் அதிக நார்ச்சத்து கொண்டதால், போதுமான ஈரப்பதமுள்ள உணவுகளுடன் சேர்க்காமல் சாப்பிட்டால், உணவு குடலில் புடைப்பை ஏற்படுத்தும் வகையில் புளிக்கத் தொடங்குகிறது. இதனால் வயிற்றுப் பெருக்கு, வாயுப் பிரச்சனை, வயிறு நிரம்பிய உணர்வு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்..
ஆரோக்கியமான மாற்று:
பருப்பு கடையலுடன் சிறிதளவு அரிசி சேர்த்து சாப்பிடலாம் (ஜீரணத்துக்கு எளிது). சப்பாத்தி உடன் காய்கறி குழம்பு அல்லது தயிர் சேர்க்கலாம்.
சப்பாத்தி – டால் உடன் வேகவைத்த காய்கறிகள், சாலட், அல்லது மோர் போன்ற உணவுகளை சேர்க்கவும். இவை உணவுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, சத்துகள் நல்லபடி உடலில் உறிஞ்ச உதவும். மேலும் ஜீரணத்தையும் எளிதாக்கும்.
டீ – பஜ்ஜி
மழைக்காலத்தில் டீ – பஜ்ஜி என்றாலே மனம் மகிழ்ந்து போகும். ஆனால் இந்த இரண்டும் சேர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக்கு பெரும் சிரமங்கள் உண்டாகலாம். தேநீரில் உள்ள டானின்ஸ் இரும்புச் சத்துப் பழுதடையச் செய்கின்றன. அதே வேளை, எண்ணெயில் ஆழ்த்திப் பொரித்த பஜ்ஜிகளில் உள்ள ஆக்ஸிடைசு கொழுப்பு வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கின்றன. இவை இரண்டும் சேரும்போது, heartburn, indigestion, acidity போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.
வேண்டுமானால் தேநீரை மட்டும் தனியாக குடிக்கவும் அல்லது எண்ணெய்யில் பொரித்த உணவுகளிலிருந்து குறைந்தது 30 நிமிட இடைவெளி விட்டு குடிக்கவும். இந்தச் சிறிய மாற்றமே acid reflux–ஐ குறைத்து, குடல்நலனையும் மேம்படுத்தும்.
இரவில் தயிர்:
தயிர் ப்ரோபயாடிக் சிறப்புக்காகப் பாராட்டப்படும் உணவு. ஆனால் அதை தவறான நேரத்தில் குறிப்பாக இரவில் சாப்பிடுவது உடலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். சூரியன் மறைந்தபின் உடலில் இருக்கும் என்சைம் செயல்பாடு மந்தமாகிறது. இதனால் பால் சார்ந்த உணவுகள் சீராக ஜீரணமாகாமல் போகும். இரவில் தயிர் சாப்பிடுவது நெஞ்செரிச்சல், சளி உருவாக்கம், மந்தமான ஜீரணம் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.
தயிரை மதிய உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். இரவில் தயிருக்கு பதிலாக சூடான சூப், அல்லது இலகுவான தால் போன்றவற்றை தேர்வு செய்தால் குடல் நலன் மேம்படும்; ஜீரணக் குறைபாடுகள் தவிர்க்கப்படும்.
உணவுக்குப் பிறகு பழம்:
பலர் உணவுக்குப் பிறகு பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று நினைக்கிறார்கள். ஆனால் பழங்கள் அரிசி, பருப்பு போன்ற சமைத்த உணவுகளை விட மிக விரைவாக ஜீரணமாகும். ஆகவே கனமான உணவுக்குப் பிறகு பழம் சாப்பிட்டால் அவை வயிற்றில் நீண்ட நேரம் தங்கி காய்ச்சி வாயு, bloating, acidity ஆகியவற்றை ஏற்படுத்தும்.
பழங்களை காலை அல்லது மதியத்திலும் மாலையிலும் தனியாக சாப்பிடுங்கள். இது ஜீரணத்தை எளிமையாக்கி, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கும்.
ராஜ்மா- சாவல்
இந்தியர்களின் செல்ல உணவுகள் ஆகிய ராஜ்மா-சாவல், சோளே-பட்டூரே சுவையானவை ஆனால் குடலுக்கு கடினமானவை. ராஜ்மா மற்றும் சோளே போன்ற தானியங்களில் புரதம் அதிகம்.. இந்த புரத–கார்ப் சேர்க்கை ஜீரண வேகத்தை குறைத்து, blood sugar திடீரென்று உயரச்செய்து, குடலில் fermentation ஏற்படச் செய்வது வழக்கம்.
வெள்ளை அரிசி அல்லது மைதாவுக்கு பதிலாக பழுப்பு அரிசி, கோதுமை மாற்று தானியங்கள் (millets), போன்றவற்றை தேர்வு செய்யலாம். இவை நீண்டநேர ஆற்றலை வழங்கி, ஜீரணத்துக்கு எளிதாக இருக்கும்.
பாரம்பரிய இந்திய உணவுகள் இயல்பாகவே மிகச் சத்தானவை. பிரச்சனை உணவின் பகுதி அளவு மற்றும் சரியான நேரம்/சேர்க்கை இல்லாததால் தான் ஏற்படுகிறது.



