திமுக அரசின் சூப்பர் திட்டம்…! ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000…!

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மூலம் குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000 வரை கிடைக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான இலவச பேருந்து திட்டம், அரசு பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் தோறும் உதவி தொகை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான உதவி தொகை கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்து ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மூலம் குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000 வரை கிடைக்கிறது. அதன்படி, மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, பெண்களுக்கு இலவச பேருந்து மூலம் மாதம் ரூ.2,000 செலவு மிச்சமாகிறது, முதியோர் உதவித்தொகை ரூ.1,200, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று!… வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நினைவுத்தூண்!

Wed Apr 17 , 2024
Dheeran Chinnamalai: சுதந்திரமான வாழ்க்கை என்பது இந்திய மக்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. பலரது ரத்தம் தான் இப்போது நாம் சுவைத்துக் கொண்டிருக்கும் சுதந்திரம். பல போராட்ட வீரர்களில் ஒரு சிலரின் வரலாறுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படிப்பட்ட போராட்டக்காரர்களில் ஒருவர்தான் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்று சிற்றூரில் பிறந்தவர்தான் தீரன் சின்னமலை. இவரது இயற்பெயர் தீர்த்தகிரி. தனது […]

You May Like