கிரானைட் குவாரியில் பாறைகள் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆந்திரப் பிரதேசம், பாபட்லா மாவட்டம் பல்லிகுரவா அருகே சத்யகிருஷ்ணா கிரானைட் குவாரி செயல்பட்டு வருகிறது. பாறை முகத்தின் ஒரு பெரிய பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், ஒடிசாவைச் சேர்ந்த 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வழக்கம்போல் தொழிலாளர்கள் அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், பாறை சரிவு நிகழ்ந்தது.
6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாறைக்கு அடியில் சிக்கியிருந்த இருவர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 16 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.பாபட்லா காவல் கண்காணிப்பாளர் துஷார் துடி, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு வருகிறார்.
முதற்கட்ட விசாரணைகளில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் குறைவாக இருந்ததாலே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆந்திர முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். விபத்துக் குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Read more: டி-மார்ட்டில் இந்த D என்றால் என்ன..? இதன் பின்னால் உள்ள சுவாரஸ்ய வரலாறு இதோ..