பெல் நிறுவனத்தில் வேலை.. ரூ.40,000 சம்பளம்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

BEL JOB 2025

பெங்களூரில் அமைந்துள்ள பெல் நிறுவன கிளையில் தற்காலிக அடிப்படையில் 610 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ப்பட உள்ளன. இதில் 488 காலிப்பணியிடங்கள் பெங்களூரிலும், 122 காலிப்பணியிடங்கள் தேசிய அளவிலும் நிரப்பப்படுகிறது.


பணியிட விவரம்:

பொறியியல் டிரைய்னி – I 610

எலெக்ட்ரிக்கல் – 301

மெக்கானிக்கல் – 186

எலெக்ட்ரிக்கல் – 79

கணினி அறிவியல் – 44

வயது வரம்பு: பொறியியல் டிரைய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபடியாக 28 வயதைக் கடந்திருக்கக்கூடாது. ஒபிசி 3 ஆண்டுகள் வரையும், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும் தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி: மத்திய அரசில் பொறியாளர் பணிக்கான விண்ணப்பதாரர்கள் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு (BE/B.Tech/B.Sc) முடித்திருக்க வேண்டும்.

தகுதி பெற்ற பிரிவுகள்:

  • எலெக்ட்ரிக்கல் (Electrical)
  • மெக்கானிக்கல் (Mechanical)
  • கணினி அறிவியல் (Computer Science)
  • எலெக்ட்ரிக்கல் தொடர்பான பிற பொறியியல் பிரிவுகள்

சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். முதல் ஆண்டு மாதம் ரூ.30 ஆயிரம், இரண்டாம் ஆண்டு ரூ,.35,000, மூன்றாம் ஆண்டு ரூ.40,000 என சம்பளம் வழங்கப்படும். இவையில்லாமல் வருடத்திற்கு ரூ.12,000 மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளுக்கு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

* இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

* எழுத்துத் தேர்விற்கு அழைப்பு: தகுதியான விண்ணப்பதாரர்கள் SMS மற்றும் இமெயில் மூலம் அறிவிக்கப்படுவர்.

* தேர்வு நேரம் மற்றும் மதிப்பெண்கள்: 90 நிமிடங்கள், 85 மதிப்பெண்கள்.

* தேர்வு புள்ளிகள்: தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவு சார்ந்த கேள்விகள் அடங்கும்.

* நெகட்டிங்: ஒவ்வொரு தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

* இடம்: தேர்வு பெங்களூரில் நடைபெறும்.

* தேர்ச்சி: தேர்வு கடந்து, இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் பொறியியல் பட்டதாரிகள் https://bel-india.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: Flash : இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.87,000ஐ நெருங்கியதால் நகைப்பிரியர்கள் ஷாக்..

English Summary

610 vacancies are to be filled on a temporary basis at the BHEL branch located in Bangalore.

Next Post

காசா அமைதி ஒப்பந்தம்!. டிரம்பின் திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு!. அனைத்து நாடுகளுக்கும் வலுவான வேண்டுகோள்!.

Tue Sep 30 , 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த காசாவுக்கான 20 அம்ச அமைதி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். காசாவிற்கான அமைதித் திட்டம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் போர்நிறுத்தம் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தநிலையில் டிரம்பின் இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு […]
donald trump narendra modi 030525236 16x9 1

You May Like