மத்திய அரசின் பொது துறை நிறுவனங்களில் ஒன்றான MCL நிறுவனம், ஜூனியர் ஓவர்மேன், மைனிங் சிர்தார், சர்வேயர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் டெக்னீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 667 இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
ஜூனியர் ஓவர்மேன் – 192,
மைனிங் சிர்தார் – 448,
சர்வேயர் – 24,
மொழிபெயர்ப்பாளர் – 1
பேத்தாலஜி டெக்னீஷியன் – 2
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
* ஜூனியர் ஓவர்மேன் மற்றும் மைனிங் சிர்தார் பணிகளுக்கு மைனிங் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* சர்வேயர் பணிக்கு மைனிங் அல்லது மைன் சர்வேயிங் துறையில் டிப்ளமோ/பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
* மொழிபெயர்ப்பாளர் பணிக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பாடங்களுடன் பி.ஏ (B.A) பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.
சம்பளம்: இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.41,966 முதல் ரூ.51,103 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு கூடுதலாக அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), மருத்துவ வசதிகள், வருங்கால வைப்பு நிதி (CPF) மற்றும் கிராஜுவிட்டி போன்ற பல்வேறு சலுகைகளும் நிறுவன விதிகளின்படி வழங்கப்படும்.
கட்டணம்: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1180 செலுத்த வேண்டும். எஸ்சி (SC), எஸ்டி (ST) மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புவோர் www.mahanadicoal.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 ஏப்ரல் 2026 இரவு 11:50 மணி வரை ஆகும்.



