மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடி மங்கலத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். அதில் இளைய மகன் சண்முகவேல் (11) அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலைகள் மாணவர் சண்முகவேலை மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதற்காகவே மகன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக காடுப்பட்டி காவல் நிலையத்தில் அருள்குமார் புகார் வழங்கினார் அதன் பெயரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.