உலகெங்கும் உள்ள முருக பக்தர்களை ஒருமித்துப் பிரமாண்ட நிகழ்வாக நடத்தும் நோக்கில், மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு வெகு விமரிசையாக தொடங்கியது. இந்து முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில், சங்கத்தை உருவாக்கி தமிழ் வளர்த்த மதுரையிலேயே, தமிழ்க்கடவுள் முருகனுக்காக இம்மாநாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை மையமாகக் கொண்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, முருகனுக்கான பற்று மக்களிடையே பெரிதும் அதிகரித்துள்ளது. வேல் […]
madurai
மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கினர். இதில் 6 நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரி இந்து முன்னணி சார்பிலும், அறுபடை வீடுகள் அமைக்கக் கூடாது என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் […]
மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை உச்சரித்த போதெல்லாம் பாஜக நிர்வாகிகள் துண்டை கைகளால் சுழற்றியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதற்கு முன்பு, பாஜக நிர்வாகிகள் அனைவரும் கழுத்தில் அணிந்திருந்த பாஜக துண்டை கையில் பிடித்து சுழற்றியபடியும், […]
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய தென் மாவட்ட அளவிலான பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு […]
மதுரையில் நாளை திமுக பொதுக் குழுவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இன்று மாலை ரோடு ஷோ’ செல்கிறார். இதையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இன்று மாலை ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விமானம் மூலம் முதல்வர் […]
“Everyone is playing games.. I don’t want to live..” Marriage in 10 days.. Last message sent to the bride..!!
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருபவர் சந்திர பாண்டியன். இவரை மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் சிலரால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு விளைவாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. காவல்துறையினர் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் […]
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து டெக் சேவை நிறுவனங்கள் புதிதாக தனது வர்த்தக அலுவலகத்தை திறந்து வரும் வேளையில், கடந்த வருடம் மதுரையில் அமெரிக்க நிறுவனமான pinnacle இன்போடெக் அலுவலகத்தை திறப்பதாக அறிவித்தது. மதுரை ஐடி துறை வளர்ச்சியில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் pinnacle இன்போடெக் நிறுவனத்தின் மதுரை அலுவலகத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், ஜூலை 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். […]
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள தென்னம நல்லூர் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்சிற்பங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில் ஆய்வாளர்கள் அனந்தகுமரன், சிவன் ஆகியோர் தென்னமநல்லூர் பகுதியின் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டபோது கி.பி 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டறியப்பட்டது. “மதுரையை நாயக்கர்கள் ஆட்சி […]
மதுரை செல்லூர் பகுதியில் வனத்துறையினரின் விழிப்புணர்வு அறிவிப்பால், வீடுகளில் அனுமதியின்றி கிளிகள் வளர்த்தவர்கள் வியாழக்கிழமை 23 கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டத்தில் குறிப்பாக மாநகராட்சி பகுதியில் வனத்துறையின் அனுமதியின்றி வீடுகளில் கிளிகள் வளர்ப்பதாக புகார்கள் வந்தன. அதன்படி மதுரை வனச்சரக அலுவலர் சாருமதி, வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு வனச்சரகர் சசிக்குமார் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் செல்லூர் பகுதியில் விழிப்புணர்வு அறிவிப்புகளை ஒலிபரப்பினர். மேலும் வீடு, வீடாக […]