எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்து படகை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள். இப்படி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்களும் நின்றபாடில்லை.
எல்லை தாண்டியதாக கூறி மீனவர்களை கைது செய்வது மட்டும் இன்றி அவர்களது படகுகளை பறிமுதல் செய்து, மீன் பிடி பொருட்களை சேதப்படுத்தி பல்வேறு அட்டூழிய செயல்களிலும் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
எனினும் இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தான், நேற்று இரவு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஷ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்து படகை பறிமுதல் செய்துள்ளது. நேற்று முந்தினம் கடலில் மீன்பிடித்த 8 பேரை இல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2 நாட்களில் 15 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: மக்களே.. இன்று முதல் Swiggy, Zomato உணவு டெலிவரி நிறுத்தம்..? – ஹோட்டல் சங்கம் அதிரடி முடிவு