‘8 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனால்…’ இந்தியா-பாக்., மோதலில் புது ட்விட்ஸ்ட்-ஐ சேர்த்த ட்ரம்ப்!

trump modi pak pm

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரிகள் (tariffs) மூலம் போர்களை தடுத்து நிறுத்தியதாக மீண்டும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.. சமீபத்திய உரையொன்றில், 2025 மே மாதத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழுமையான போர் வெடிப்பதை தானே தடுத்ததாக கூறிய அவர், இப்போது அதில் மேலும் சில புதிய விவரங்களையும் சேர்த்துள்ளார்.


வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் “ இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. முன்பு 7 என நினைத்தோம், ஆனால் இப்போது 8 என்று சொல்லலாம், ஏனெனில் ஒன்று புறக்கணிக்கப்பட்டது,நான் எட்டு போர்களில் ஐந்து அல்லது ஆறு போர்களை சுங்க வரிகளின் மூலம் தடுத்தேன்,” என்று தெரிவித்தார்.

மேலும் “இந்தியா மற்றும் பாகிஸ்தான் — இரண்டு அணு சக்தி நாடுகள் — போருக்குத் தயாராக இருந்தன. 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அப்போது நான், ‘நீங்கள் போராடப் போகிறீர்கள் என்றால், உங்களிடம் வரிகள் விதிக்கப் போகிறேன்’ என்று எச்சரித்தேன். அவர்கள் அதில் மகிழ்ச்சியடையவில்லை. 24 மணி நேரத்திற்குள், நான் அந்தப் போரைக் கட்டுப்படுத்தி விட்டேன். சுங்க வரிகள் இல்லாமல் அதைச் செய்ய முடியாது,” என்று ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்ப் பலமுறை தாம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அணு போரை தடுத்து நிறுத்தியதாகக் கூறி வருகிறார். ஆனால் இந்தியா எந்த மூன்றாம் தரப்பின் தலையீடும் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜம்முகாஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.. இதற்கு பதிலடியாக இந்த கடந்த மே மாதம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற தாக்குதலை நடத்தியது. இதை தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான பதற்றம் அதிகரித்தது..

ட்ரம்ப் கூறுகையில், மே 9ஆம் தேதி இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் தாம் பேசிச் சமாதான முயற்சி செய்ததாகவும், அடுத்த நாளே இரு நாடுகளும் நிறுத்து ஒப்பந்தம் அறிவித்ததாகவும் கூறினார்.

புதன்கிழமையன்று மயாமியில் நடந்த நிகழ்ச்சியிலும் ட்ரம்ப், “இருவருடனும் வர்த்தக ஒப்பந்தம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் போர் செய்யப் போகிறார்கள் என்று ஒரு செய்தியைப் பார்த்தேன். அப்போது தான் சுங்க வரிகளைப் பற்றி மிரட்டினேன்; அதுவே போரை நிறுத்தச் செய்தது,” என்றார்.

கடந்த வாரம் தென் கொரியாவில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டிலும் (APEC), ட்ரம்ப் இதே கருத்தைத் தெரிவித்தார் — “அணு போரைத் தடுக்க இந்தியா மற்றும் பாகிஸ்தானை சுங்க வரிகளால் மிரட்டினேன்” என்று தெரிவித்தார்..

இந்தியாவின் பதில்

ஆனால் இந்தியா ட்ரம்பின் கூற்றை முற்றிலும் நிராகரித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் (MEA) “இந்தியா–பாகிஸ்தான் இடையேயான நிறுத்து ஒப்பந்தம் இரு நாடுகளின் ராணுவப் பிரிவு தலைவர்கள் (DGMO) வழியாக நடக்கும் வழக்கமான ராணுவத் தொடர்புகள் மூலமே ஏற்பட்டது. இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவே உள்ளது.. பாகிஸ்தானுடன் உள்ள பிரச்சினைகள் இருதரப்பாகவே தீர்க்கப்பட வேண்டும்; எந்த மூன்றாம் தரப்பின் தலையீடும் ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று தெரிவித்திருந்தது…

Read More : இந்தியாவுக்கு வருகை தரும் டிரம்ப்!. “மோடி எனது நண்பர், அவர் ஒரு சிறந்த மனிதர் என புகழாரம்!.

RUPA

Next Post

தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் பயங்கர தீ விபத்து..!! கரும்புகையால் சூழ்ந்த பூந்தமல்லி..!! பெரும் பரபரப்பு..!!

Fri Nov 7 , 2025
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த வயலாநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் எரிவாயுக் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்து அனுப்பும் பணி இந்த மையத்தில் நடைபெற்று வந்தது. இன்று அதிகாலை வழக்கம் போல ஊழியர்கள் சமையலறையில் உணவு தயாரிக்கும் பணியில் […]
Fire 2025 1

You May Like