செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பு மற்றும் அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, AI-ன் எதிர்காலம் குறித்த கவலைகளை நிராகரித்துள்ள அவர், நடக்கவே வாய்ப்பில்லாத காட்சிகளை எழுப்பி அச்சத்தை ஏற்படுத்துபவர்களை ‘மிகவும் எதிர்மறையான சக்திகள்’ என்று விமர்சித்துள்ளார். அயர்லாந்தில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் பேசிய ட்ரம்ப், AI துறையில் […]

G7 உச்சிமாநாட்டின் போது சக உலகத் தலைவர்களிடம் “நான்தான் தலைவர்” (I’m the boss) என்று நகைச்சுவையாகக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்த நிகழ்வு இணையத்தில் வைரலானதற்குப் பிறகு அது குறித்துப் பதிலளித்துள்ளார். இந்தக் கருத்து சமூக ஊடகங்கள் மற்றும் சர்வதேச செய்தித் தளங்களில் வேகமாகப் பரவி விவாதப் பொருளாக மாறியது.. ‘தி ஆக்சியோஸ் ஷோ’ (The Axios Show) நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், அந்தக் கருத்து […]

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி தொடர்பான புரிதல் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.. இதனை ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாதி உறுதிப்படுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக நிலவி வந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதாகவும், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை விதித்திருந்த முற்றுகை விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் […]

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்றிரவு ஈரான் மீது ‘மிகக் கடுமையான’ தாக்குதலை நடத்தப்போவதாகக் கூறினார். மேலும், “எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும்” ஈரானின் முக்கிய பகுதியான ‘கர்க் தீவு’ (Kharg Island) உட்பட அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம் என்றும் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் எச்சரித்தார். அமெரிக்கா – ஈரான் இடையே தொடர்ந்து இரண்டாவது […]

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான முயற்சிகளை ஈரான் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.. போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தர்களுடன் ஈரான் தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. ஈரானின் புரட்சிகரப் படைக்கு நெருக்கமானவையாகக் கருதப்படும் ஃபார்ஸ் மற்றும் தஸ்னிம் செய்தி நிறுவனங்கள் இந்த தகவல்களை வெளியிட்டன.. அதன்போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஈரானிய அதிகாரிகள் தொடர்பை நிறுத்திவிட்டனர். இருப்பினும், அமெரிக்க […]