பீகார் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) செயல்முறையின் இரண்டாம் கட்டத்தை நடத்தியது.. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த SIR நடவடிக்கை ஏற்கனவே தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் புதுச்சேரியில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் நவம்பர் இந்த மாதம் 11-ம் தேதி வரை SIR பணிகள் நடைபெற்றன.. வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்கள், வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தவர்கள், அந்த விலாசத்தில் இல்லாதவர்களின் பெயர்களை நீக்கும் பணி நடந்து வந்தது..
இந்த நிலையில் புதுச்சேரியில் SIR பணிகளுக்கு பிறகான வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 10.05% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.. அதாவது 85,531 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்கள் 14,151, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் 45,312 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு ஜனவரி 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..



