புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமையில் கடந்த 7-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ‘பிங்க்’ நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில் ‘ரோடமின்-பி’ என்ற ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட வடஇந்தியர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் குழந்தைகளைக் குறிவைத்து பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறது. குறிப்பாக, கடற்கரைப் பகுதிகளில் பஞ்சு மிட்டாய் அதிக அளவில் விற்கப்படுகின்றன. பஞ்சு மிட்டாய்களில் […]

புதுச்சேரியில் தடையை மீறி கடலில் குளித்தால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, ரோமேனட் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரை போன்ற கடற்கரைகள் இருப்பதினால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். இப்பகுதிகளில் சுனாமிக்கு பிறகு கருங்கற்கள் கொட்டப்பட்டது. கடலில் இறங்கி விளையாட முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தலைமைச் செயலகம் எதிரே […]

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி, வரும் 22ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காணொலியில் காண புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் ஏற்பாடு செய்ய இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. அயோத்திராமர் கோயிலில் […]

புதுச்சேரியில் மாடுகளை ரோட்டில் திரியவிட்டால் ரூ.12,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சாலைகளில் முதல் முறையாக மாடுகள் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.3,500 அபராதம்; 2ஆம் முறையாக மாடுகளை திரியவிட்டால் ரூ.12,000 அபராதம் விதிக்கப்படும். முதற்கட்டமாக புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ஒலிப்பெருக்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தலைமை செயலகம், அருங்காட்சியகம், சந்தை ஓட்ட பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதனால் மாட்டின் […]

புதுச்சேரியில் வீட்டை காலி செய்யுமாறு கூறியதால் வீட்டின் உரிமையாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பின் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி ஆரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். 50 வயதான இவர் பேன்சி டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு குமுதா என்ற பெண் பூஜைக்கான […]

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகவுள்ள ‘மிக்ஜம்’ புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. […]

புதுவை பல்கலைக்கழகம் 21.09.2022 மற்றும் 27.09.2023 அன்று காலியாக உள்ள பல்வேறு ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரியிருந்தது. இதில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர் (இயற்பியல்) முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் (நெட் ஒர்க்கிங்/கணினி) உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக அனுமதி அட்டை, நேரம், […]

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கலின் பொழுது முதல்வர் என்.ரங்கசாமி, யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகத்தை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தும், என்றார். மற்றொரு […]

புதுவையில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. புதுவையில் இயங்கி வரும் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 ரூபாய் வரை டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. 2020 அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கப்படும்போது, மக்கள் நலன் கருதி புதுவையில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.120 டிக்கெட் ரூ.100 ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75 […]

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அனைத்து விதமான சிகிச்சையும் அவருக்கு அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நுரையீரல் நோய் […]