fbpx

தேசிய செய்திகள்

சினிமா 360°

  • ”15 வருசம்; நான் ரொம்ப கொடுத்து வச்சவேன்”!. விஜயசாந்திக்கு பிறகு தன்ஷிகா தானாம்!. விஷாலின் காதலில் இவ்வளவு சுவாரஸியமா?

    Vishal – Dhanshika: 2004ஆம் ஆண்டு வெளியான “செல்லமே” படத்தின் மூலம் விஷால் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து “சண்டகோழி”, “திமிரு”, “தாமிரபரணி” என பல படங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு விஷால் இயக்குனர் அர்ஜுனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து “விஷால் ஃபிலிம் பேக்டரி” என்னும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதன்மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்தார்.

    மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் நடிகர் விஷால் பணியாற்றி உள்ளார். விஷாலின் திரைப்படங்களை தாண்டி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிலும் குறிப்பாக அவரது திருமணம் குறித்து அவ்வப்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் பல்வேறு வதந்திகள் வெளியாகி ரசிகர்களிடையே பல குழப்பங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என விஷால் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா இருவருக்கும் இடையே திருமணம் நடைபெறவிருப்பதாக வெளிப்படையாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தன்னுடைய திருமணம் குறித்து சமீபத்தில் பேசிய விஷால், “நான் முன்னதாக கூறியதுபோல நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட்ட பிறகுதான் எனது திருமணம் நடைபெறும். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட உள்ளது. அதன் பிறகு, ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில் எனது திருமணம் நடைபெறும். ஆம், நான் எனது வாழ்க்கைத்துணையை கண்டுபிடித்துவிட்டேன். இது காதல் திருமணம். விரைவில் இதுகுறித்த விரிவான தகவல்கள் வெளியாகும்” எனக் கூறியிருந்தார்.

    நடிகை சாய் தன்ஷிகா “பேராண்மை”, “பரதேசி” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். “கபாலி” படத்திலும் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருப்பார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா நடித்துள்ளார். விஷாலும், சாய் தன்ஷிகாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்ததாகவும், முதலில் நட்பாக பேசிய இவர்களிடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகியது.

    சாய் தன்ஷிகா நடித்துள்ள “யோகி டா” திரைப்பட விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இடையேயான திருமணம் தகவலை உறுதிசெய்துள்ளனர். விழாவில் பேசிய நடிகை சாய் தன்ஷிகா, நாங்கள் காதலிக்கிறோம். 15 வருடமான நட்பில் இருந்தோம், அதன் பின் பேச தொடங்கியபோது இது திருமணத்தில் தான் முடியும் என இருவருக்கும் தோன்றியது, அதனால் முடிவெடுத்துவிட்டோம்.”“ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. அன்று தான் விஷாலின் பிறந்த நாள். ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடம் திறக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்து எங்கள் திருமணம் நடக்க இருக்கிறது.”

    தொடர்ந்து விஷால் பேசும்போது, ”என்னைவிட தன்ஷிகா உடன் friendly ஆக இருக்கும் நபர் என் அப்பா தான். தன்ஷிகா ஒரு wonderful person. கண்டிப்பாக நாங்க வடிவேலு – சரளா அம்மா மாதிரி ஒரு ஜோடியாக இருங்க மாட்டோம். யோகிடா சண்டை காட்சிகள் பார்க்கும்போது நான் கொஞ்சம் சூதானமா இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். கிக் என் தலை வரை வருகிறது. பாண்டியன் மாஸ்டரிடம் சென்று அதை block செய்வது எப்படி என கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அந்த அளவுக்கு சண்டை வரக்கூடாது. எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. நான் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கேன்.

    விஜயசாந்திக்கு பிறகு தன்ஷிகா தான் சிறப்பாக சண்டை காட்சிகளில் நடித்து இருந்தார். நான் ஆக்ஷன் ஹீரோ என சும்மா சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எங்க வீட்டுக்கு security தேவை இல்லை, நாங்க ரெண்டு பேரும் தான் செக்யூரிட்டி. தன்ஷிகாவை வாழ்நாள் முழுக்க இதே போல சிரித்த முகத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.

    Readmore: இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்த 2 பேர் உயிரிழப்பு..!! இத்தனை பேருக்கு பாதிப்பா..?

உலகம்

  • இந்தியாவுக்கு அதிகரிக்கும் பதற்றம்!. வங்கதேசம், மியான்மர் எல்லையில் புதிய வழித்தடம்!. பின்னணியில் அமெரிக்கா!

    Bangladesh – Myanmar: ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, உலகின் கவனம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் திரும்பியுள்ளது. ஆனால் நாட்டின் வடகிழக்கு எல்லையான வங்காளதேசத்திலும் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று அரங்கேறி வருகிறது. அதாவது, மியான்மரில் உள்நாட்டுப் போர் காரணமாக, சமீபத்திய ஆண்டுகளில் ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். ரோஹிங்கியாக்கள் மியான்மருக்குத் திரும்புவதற்கு வசதியாக வங்கதேசம் ஒரு வழியைத் தேடுகிறது. இதற்கிடையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மார்ச் மாதம் டாக்காவுக்குச் சென்று ரோஹிங்கியா அகதிகள் திரும்புவதற்காக ஒரு ‘மனிதாபிமான வழித்தடத்தை’ உருவாக்க முன்மொழிந்தார்.

    இதனை தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது வங்காளதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையிலான ஒரு விஷயம் போல் தோன்றினாலும், மியான்மர் மற்றும் வங்காளதேசத்துடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்வதால், இந்த வழித்தடம் இந்தியாவிற்கும் ஒரு கவலையாக மாறக்கூடும்.

    ஃபர்ஸ்ட்போஸ்ட்டின் அறிக்கையின்படி, பங்களாதேஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் (NSA) ரோஹிங்கியா விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதியுமான கலிலுர் ரஹ்மான், எந்தவொரு உள் அல்லது வெளிப்புற ஒப்புதலும் இல்லாமல் இந்த வழித்தடத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார். மேலும், ரஹ்மான் அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படுகிறார், மேலும் இந்த வழித்தடத்தின் பின்னணியில் அமெரிக்காவும் இருப்பதாக நம்பப்படுகிறது.

    இதற்கிடையில், பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் குடியேறிய ரோஹிங்கியா அகதிகள் மியான்மரின் ராக்கைனுக்குத் திரும்ப மறுத்து வருகின்றனர். மனிதாபிமான வழித்தடத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முடிவை ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் எதிர்க்கிறது. அத்தகைய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இடைக்கால அரசாங்கத்திடம் இல்லை, மாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் உள்ளது என்பது அவர்கள் கூறிவருகின்றனர்.

    இந்த வழித்தடத்தை மியான்மரில் உள்ள இராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்று அவாமி லீக் கூறுகிறது. வங்காளதேச தேசியவாதக் கட்சியும் (BNP) இதை விமர்சித்துள்ளது. இந்த வழித்தடம் வங்காளதேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பல அமைப்புகள் கூறி வருகின்றன. மியான்மருக்கு ஒரு வழித்தடத்தை உருவாக்குவது போன்ற முடிவுகள் இந்தியாவின் அண்டை நாடுகளின் பலவீனமான பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    யூனுஸின் முடிவு, இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சிக் குழுவான அரக்கன் இராணுவத்தை (AA) வலுப்படுத்தக்கூடும். இது சீனா மியான்மரில் தனது செல்வாக்கை அதிகரிக்க உதவும், மேலும் பிராந்திய உறுதியற்ற தன்மையை அதிகரிக்கும். இந்தியா இரு தரப்பினருடனும் தொடர்பில் உள்ளது. மியான்மருடனான 1,640 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையைப் பாதுகாக்க, இந்தியா இரு தரப்பினருடனும் – இராணுவ ஆட்சிக்குழு மற்றும் கிளர்ச்சிக் குழுக்களுடனும் தொடர்ந்து விவாதித்து வருகிறது, ஆனால் இந்த வழித்தடம் இந்தியாவின் பாதையை சிக்கலாக்கும்.

    பங்களாதேஷில் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் மனிதாபிமான வழித்தடத்தில் குறித்து கலீலுர் ரஹ்மான் வலியுறுத்துவது, வாஷிங்டன் இதை நோக்கிச் செயல்படுவதைக் குறிக்கிறது. சமீபத்தில், அமெரிக்காவிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க சரக்கு டாக்காவிற்கு வந்தது. இது அரக்கன் இராணுவத்திற்கு ஆயுதங்களை அனுப்ப இந்த வழித்தடம் பயன்படுத்தப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

    இந்த வழித்தடம் மியான்மரில் உள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்கு இராணுவ உபகரணங்களை அனுப்புவதற்கு மட்டுமல்லாமல், வங்கதேசத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகளால் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கும் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் உள்ளது. மியான்மர் அபின் சாகுபடி மற்றும் செயற்கை போதைப்பொருள் உற்பத்திக்கான மிகப்பெரிய மையமாகும். இந்த சூழலில், மியான்மர் மற்றும் வங்கதேசத்துடனான நீண்ட எல்லையில் இந்தியாவிற்கு கவலைகள் அதிகரிக்கும் என்பது உறுதி. இது இந்தியாவின் வடகிழக்கு எல்லைகளில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும்.

    Readmore: பாகிஸ்தானுக்கு எதிராக.. உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும்..?

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]