இத்தனை கோடி நஷ்டமா?… 225 சிறிய நகரங்களில் உணவு டெலிவரி சேவையை நிறுத்திய Zomato நிறுவனம் !

ரூ.346.6 கோடி நஷ்டம் அடைந்துள்ளதால் 225 சிறிய நகரங்களில் தனது சேவைகளை நிறுத்தப் போவதாக பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி தொழில்நுட்ப நிறுவனமான Zomato,மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த நிறுவனம் அதன் லாபத்தை அதிகரிக்க சமீபத்தில் தங்க சந்தாவை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், 225 சிறிய நகரங்களில் தனது சேவைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த டிசம்பரில் முடிவடைந்த காலாண்டு நிதிவருவாய் அறிக்கையை இந்தநிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ரூ.346.6 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக, 225 சிறிய நகரங்களில் தனது சேவைகளை நிறுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

மேலும், இந்த நகரங்களின் சேவைக்கான வரவேற்பு ஊக்கமளிக்கும் வகையில் இல்லை என்பதால் சேவையை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 225 நகரங்களில் உணவு விநியோக சேவையை நிறுத்தியுள்ளதாக தெரிவித்த உணவு டெலிவரி நிறுவனம், இந்த நகரங்கள் டிசம்பர் காலாண்டின் மொத்த வருவாயில் 0.3 சதவீதம் மட்டுமே என்று தெரிவித்துள்ளது.

இது மிகவும் எதிர்பாராத மந்தநிலையாகும். இது எங்களுடைய உணவு விநியோக லாபத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. இருப்பினும் நிர்ணயம் செய்யப்பட்ட லாப இலக்கை அடைவதற்கான நல்ல நிலையில் தான் இருக்கிறோம்” என்று சோமேட்டோ கூறியுள்ளது. கடந்த சில காலாண்டுகளில் இந்த நகரங்களில் உணவு டெலிவரிக்கான சேவைக்கான வரவேற்பு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இல்லை என்றும், இந்த நகரங்களில் நாங்கள் செய்த முதலீட்டில் லாபம் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் நிறுவனம் கூறியது

மேலும் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ், சோமேட்டோ நிறுவனம் அதன் மிகவும்பிரபலமான கோல்ட் சந்தாவை (Gold subscription) மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. “இந்த திட்டம்(சோமேட்டோ கோல்ட்) வாடிக்கையாளர்களின் விசுவாசத்தையும், ஆர்டர்களையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்; இந்த திட்டத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்” என்றும் சோமேட்டோ நிறுவனம் கூறியுள்ளது.

Kokila

Next Post

#TnGovt: விவசாயிகள் இந்த செயலி மூலம் நீங்கள் அனைத்தும் தெரிந்துகொள்ளலாம்...! முழு விவரம் இதோ...

Tue Feb 14 , 2023
விவசாயிகளுக்கு, தங்கள்‌ வேளாண்‌ பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க அதிக நேரமும்‌ அதிக அளவில்‌ வேலையாட்களும்‌ தேவைப்படுகிறது. காலவிரயத்தை தவிர்க்கவும்‌, வேலை ஆட்கள்‌ பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும்‌ வேளாண்மை இயந்திரமயமாக்குதல்‌ இன்றியமையாததாகிறது. அதிக விலையுள்ள வேளாண்‌ இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும்‌ வகையில்‌ வேளாண்‌ இயந்திரங்கள்‌ மற்றும்‌ கருவிகளை தமிழக விவசாயிகளுக்கு வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறையின்‌ மூலம்‌ குறைந்த வாடகைக்கு வழங்கப்படுவதுடன்‌, அரசுத்திட்டங்கள்‌ மூலம்‌ மானிய விலையில்‌ […]

You May Like