நள்ளிரவில் கோரம்.. லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 9 விவசாயிகள் பலி..!!

Accident 4

ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் விவசாய கூலித் தொழிலாளர்கள் சென்ற லாரி பள்ளத்தில் கவிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 விவசாயிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை இரவு, ரயில்வே கோடூரிலிருந்து ராஜம்பேட்டை நோக்கி மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி, புல்லம்பேட்டை மண்டலத்தின் ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே கவிழ்ந்தது. இந்த லாரியில், மாம்பழங்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 17 விவசாயத் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். தொழிலாளர்களை கொண்டு சென்ற லாரி, வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் ஒன்பது தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர், காயமடைந்தவர்களை மீட்டு ராஜம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி கவிழ்ந்து 9 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: மகிழ்ச்சி..! மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து விலக்கு…!

English Summary

9 farmers killed as lorry falls into ditch..!!

Next Post

உஷார்!. நீங்கள் வாங்கிய நிலம் ரத்து செய்யப்படலாம்!. நிலப் பதிவேடு தொடர்பான புதிய விதிகளை தெரிஞ்சுக்கோங்க!.

Mon Jul 14 , 2025
நீங்கள்புதிய நிலம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா?. அப்போ, சொத்து பதிவு விதிமுறைகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையிலிருந்து, நிலம் வாங்கத் திட்டமிடும் ஒவ்வொருவரும் இந்த புதிய விதிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் நிலம் அல்லது சொத்தை வாங்கும் போது பதிவு செய்வது ஒரு முக்கியமான சட்ட செயல்முறையாகும், இது சொத்தின் உரிமையை உறுதி செய்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்தில் இந்த […]
land registry new rules 11zon

You May Like