90 தொகுதிகள் + முதல்வர் வேட்பாளர்.. நாளை NDA கூட்டணியில் இணையும் விஜய்..? அப்ப இபிஎஸ்..? பரபரக்கும் அரசியல் களம்..!

vijay amitshah

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை..


ஆனால், தவெக கட்சி என்.டி.ஏ கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. டெல்லி பாஜக இந்த விஷயத்தில் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விஜய்க்கு துணை முதல்வர் பதவியும், 60 தொகுதிகளையும் வழங்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாம்.. மேலும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது..

ஆனால் தவெக தரப்பில் 90 தொகுதிகள் வரை கேட்டதாக கூறப்படுகிறது.. அதை கொடுக்கவும் பாஜக தலைமை தயாராக உள்ளதாம்.. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தான் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை என்று பாஜக கூறி வரும் நிலையில், தற்போது விஜய்க்கு 90 தொகுதிகள் வரை வழங்க அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறதாம்.. துணை முதல்வர் பதவியை விஜய் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும் விஜய் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

தவெகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் என்.டி.ஏ கூட்டணியில் இணைய ஓ.கே சொல்லிவிட்டார்களாம்.. ஆனால் என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி வரும் இபிஎஸ் இதற்கு ஓ.கே சொல்லிவிட்டாரா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.. பெரும்பாலும் விஜய்யை முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்க மாட்டார் என்றே தெரிகிறது..

இந்த நிலையில் தவெக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் Zoom Meeting-ல் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது கூட்டணி அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டுள்ளார். அப்போது தேர்தலில் தனித்தோ அல்லது கூட்டணியோ எப்படி போட்டி என்றாலும் கட்சி தலைமைக்கு கட்டுப்படுகிறோம் என்று மாவட்ட செயலாளர்கள் கூறியதாக தெரிகிறது.. அப்போது தனித்து நின்றால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என ஆனந்த் அறிவுரை வழங்கினாராம். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 60 வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, விஜய் நாளை சிபிஐ முன்பு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் நிதின் நபின் ஆகியோர் முன்னிலையில், தவெக நாளை அதிகாரப்பூர்வமாக என்.டி.ஏ கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் பிரதமர் மோடியை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Read More : திடீர் ட்விஸ்ட்.. திமுக கூட்டணிக்கு ஆதரவு.. புகழேந்தி அறிவிப்பு.. எடப்பாடி கதை முடிந்தது எனவும் காட்டம்..!

RUPA

Next Post

“பெண்களை யாரும் பணிக்கு அமர்த்த மாட்டார்கள்..” மாதவிடாய் விடுப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

Fri Mar 13 , 2026
அனைத்து பணியிடங்களிலும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.. சட்டப்படி மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது பெண்களின் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.. மாதவிடாய் சுகாதார கவலைகள் முக்கியமானவை என்றாலும், நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் கட்டாய விடுப்பு வழங்குமாறு கட்டாயப்படுத்துவது பெண்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்கக்கூடும் என்றும் நீதிமன்றம் […]
supreme court period leave

You May Like