தமிழகத்தில் 96.22% SIR படிவம் விநியோகம்…! தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்…!

election 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நவம்பர் 24 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது.

2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,50,24,723 கணக்கெடுப்பு படிவங்கள் (99.07%) இதுவரை (2025 நவம்பர் 24) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,32,828 வாக்குச் சாவடி அலுவலர்கள், 11,40,598 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,16,90,765 கணக்கெடுப்பு படிவங்கள் (96.22%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 3,19,70,385 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 68,470 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,38,853 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 9,76,431 படிவங்கள் (95.58%) விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5,96,288 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அசத்தும் இந்தியா... முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி போர்க்கப்பல்...!

Tue Nov 25 , 2025
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஐஎன்எஸ் மாஹே மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தலைமை தாங்கினார். கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் கட்டமைத்துள்ள ஐஎன்எஸ் மாஹே, அது வடிவமைத்த 8 கப்பல்களில் முன்னணி கப்பலாகும். பெல், எல் அண்ட் டி டிஃபென்ஸ், மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், என்.பி.ஓ.எல் […]
ship 2025

You May Like