பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கரூர் சென்றுள்ளார்.. இந்த நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கரூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது, கரூர் மாவட்டத்திற்கு ஜவுளி காட்சி அரங்கம் அமைக்கப்படும் என்றும், திருமாநிலையூரில் ரூ.47 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது.. திமுக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பதை மக்களின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்து தெளிவாக உணர முடிகிறது.. அதனால் தான், வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.. மக்களுக்கு நன்மை செய்யவே எனக்கு நேரம் போதவில்லை.. அதனால் தான் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை.. மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்கள் வைக்கக்கூடிய விமர்சனங்களை நான் மதிக்க விரும்பவில்லை..
இந்த ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கேட்டால் சொல்வார்கள்.. தாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்வதற்கா நாள்தோறும் மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களின் பேட்டிகளுக்கு நான் பதிலளிக்க தயாராக இல்லை.. திமுக ஆட்சியை விமர்சித்தும், என்னை எதிர்த்து கருத்து சொல்லி பிரபலமாகலாம் என்று நினைப்பவர்களை பார்த்து வருத்தமடைகிறேன்.. மக்களுக்கு நல்லது செய்வேன் என்ற நம்பிக்கையில் மக்கள் என்னை முதலமைச்சர் ஆக்கியுள்ளனர்.. அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்..” என்று தெரிவித்தார்..