fbpx

’வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது’..! யாரை தாக்குகிறார் மோடி..!

நாடு வாரிசு அரசியலைப்‌ பார்த்தும்‌, வாரிசு அரசியல்‌ செய்யும்‌ கட்சிகளைப்‌ பார்த்தும்‌ நொந்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, “பாக்யா நகரான ஹைதராபாத், நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல சமஸ்தானங்கள், பிராந்தியங்களை ஒன்றிணைத்து, ஒரே பாரதத்துக்கு அடித்தளமிட்டவர் சர்தார் படேல். ஒரே பாரதத்தை சிறந்த பாரதமாக மாற்றுவது தான் நமது லட்சியம். நல திட்டங்களை செயல்படுத்துவதில், நாம் எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக அரசுகள், பெண்கள் முன்னேற்றத்துக்காக பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன. அதனால் தான் கடந்த 8 ஆண்டுகளில் நடந்த அனைத்து தேர்தல்களிலும், பாஜகவுக்கான பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

PM Modi to address election rallies in Punjab on February 14, 16, 17

எதிர்க்கட்சிகள்‌ நம்மை எப்படி விமர்சித்தாலும்‌ நமது கட்சியின்‌ நோக்கம்‌ நாட்டு மக்களின்‌ தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே. நாடு வாரிசு அரசியலைப்‌ பார்த்தும்‌, வாரிசு அரசியல்‌ செய்யும்‌ கட்சிகளைப்‌ பார்த்தும்‌ நொந்துவிட்டது. வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் கட்சிகளால், அரசியலில் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது. பாஜக நிர்வாகிகள்‌ நாட்டு மக்களுக்காக சேவையாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்‌. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு-வை கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

மருமகனை கழுத்தை நெரித்து கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்த மாமனார்..!

Mon Jul 4 , 2022
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், போடலகொண்டபள்ளியைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி (26), சாப்ட்வேர் கம்பெனியில், சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த கந்துலா வெங்கடேஸ்வர ரெட்டியின் மகள் ரவாளியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ரவாளியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பிறகு ஊர் திரும்பியதும். ரவாளியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக நாராயண ரெட்டியிடம் […]

You May Like