fbpx

’சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது எப்போது?’ – வைகோ

தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் அடைக்கும் சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது எப்போது? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்ததுடன், மீன்பிடிக் கருவிகள் மற்றும் படகை பறிமுதல் செய்துள்ளனர். கைதான 5 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர். மீன்பிடித் தடைக் காலம் முடிந்து தற்போது மீண்டும் கடலுக்குச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். பொருளாதாரத்தில் நிலைகுலைந்து போயுள்ள இலங்கைக்கு, இந்தியா வாரி வாரி வழங்கியபோதும் சிங்கள அரசு, இந்திய மீனவர்களை வேட்டையாடுவதைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Let it end with me': MDMK general secretary Vaiko not in favour of son's  entry in politics- The New Indian Express

ஒன்றிய பா.ஜ.க. அரசு, இலங்கை அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து, கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து கைது செய்து, இலங்கை சிறையில் அடைக்கும் சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது எப்போது? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

“ 6 ஆண்டுகளாக என்னை கூட்டு பலாத்காரம் செய்தனர்..” பாதிக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

Tue Jul 5 , 2022
இளம்பெண் ஒருவர் 6 ஆண்டுகளாக தான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.. பெண்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான குற்றம் பீகாரில் பதிவாகியுள்ளது.. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தின் வாரிசாலிகஞ்ச் என்ற பகுதியில் இந்த சம்பவம் இருந்து பதிவாகியுள்ளது. மோகன் குமார் மற்றும் ஹிமான்ஷு குமார் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. முக்கிய குற்றவாளியான மோகன், கொத்தனாராக பணிபுரிகிறார், […]

You May Like