இளம்பெண் ஒருவர் 6 ஆண்டுகளாக தான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்..
பெண்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான குற்றம் பீகாரில் பதிவாகியுள்ளது.. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தின் வாரிசாலிகஞ்ச் என்ற பகுதியில் இந்த சம்பவம் இருந்து பதிவாகியுள்ளது. மோகன் குமார் மற்றும் ஹிமான்ஷு குமார் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. முக்கிய குற்றவாளியான மோகன், கொத்தனாராக பணிபுரிகிறார், மேலும் 2016ல் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 15 வயது.
அப்பெண் குளித்துக் கொண்டிருந்தபோது படம் பிடித்த மோகன், தனது நண்பர் ஹிமான்ஷு உடன் இணைந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. எனினும் பயம் காரணமாக இந்த விஷயத்தை அப்பெண் யாரிடமும் சொல்லவில்லை.. பின்னர் ஹிமான்ஷு தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி அவரிடம் பணம் கேட்கத் தொடங்கினார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது தாயிடமிருந்து பணத்தை திருடி குற்றவாளிக்கு கொடுத்தார். எனினும் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பாதிக்கப்பட்ட பெண் இறுதியாக தனது தாயிடம் நடந்ததை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணி தாய், பின்னர் இதுகுறித்து காவல்துறையில் புகாரளித்துள்ளார்.. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்..