fbpx

மக்களே அலர்ட்… தமிழகத்தில் மட்டும் புதிதாக 2,662 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…! உயிரிழப்பு எண்ணிக்கை….?

தமிழகத்தில் மேலும் புதிதாக 2,662 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,188 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும் தமிழகத்தில் இருந்த 2,658 நபர்களுக்கும் என மொத்தம் 2,662 நபர்களுக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 6,61,21,150 நபர்களுக்கு வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 34,88,091 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16,765 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சைப் பெற்று நோயாளிகளில் 1,512 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,060 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 373 நபர்களுக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Also Read: Polytechnic மாணவ, மாணவிகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை..‌.! உடனே விண்ணப்பிக்கவும்….! ஆட்சியர் அறிவிப்பு

Vignesh

Next Post

எல்லாம் ரெடியா இருங்க... TET தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்...! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...!

Wed Jul 6 , 2022
TET தாள் 1 தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்று தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை முதற்கட்ட தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு […]

You May Like