நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 கட்டணம் என்ற மத்திய அரசின் ஆணை தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..
கிணறு, ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை எடுக்க அரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது.. மேலும் அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்தது..
இந்நிலையில் நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 கட்டணம் என்ற மத்திய அரசின் ஆணை தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.. நிலநீர் பாதுகாப்பு மற்றும் நீர் எடுத்தல் தொடர்பான தற்போதைய விதிமுறைகள் தொடரும் என்றும், மறு அறிவிப்பு வரும் இந்த விதிகளே அமலில் இருக்கும் என்றும் விளக்கமளித்துள்ளது.. வீடுகளில் நிலத்தடி நீர் எடுத்தாலும் ரூ.10,000 கட்டணம் என்று மத்திய அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது..