இந்திய தர நிர்ணய அதிகாரிகள் சென்னையில் ஸ்ரீ பாலாஜி அக்வா நிறுவனத்தில் ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பெயரில், அமலாக்க சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது, பிஐஎஸ் சட்டம் 2016 இன் பிரிவு 28 இன் படி, நிறுவனம் எந்த செல்லுபடியாகும் உரிமமும் அல்லது அங்கீகாரம் இல்லாமல், “நேச்சுரல் பிளஸ்” என்ற பிராண்ட் பெயரில் PET பாட்டில்களில் நிரப்பப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரில் ISI முத்திரையை தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. . இது பிஐஎஸ் சட்டம் 2016-ஐ மீறும் செயல் என்பதால் இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
BIS SRO, CNBO-II, சென்னை ஆல் இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016 இன் கீழ் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூபாய் 2,00,000 அபராதம் விதிக்கப்படும். Section 29 of BIS Act, 2016 இல் கூறப்பட்டுள்ளபடி, பொருளின் மதிப்பை போல பத்து மடங்கு அல்லது BIS Standard Mark ( Including Hallmark ) முத்திரையிடப்பட்ட தயாரிக்கப்பட்ட /விற்பனை செய்யப்பட்ட பொருள்களுக்கான மதிப்பிற்கு அபராதம் விதிக்கப்படும்.எனவே ISI முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
BIS CARE APP செயலியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது cnbo2@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாகவோ கூட இத்தகைய புகார்கள் செய்யப்படலாம். அத்தகைய தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். மேலும் தகவலுக்கு, BIS SRO சென்னை அலுவலகத்தை தொலைபேசி எண்: 044-2254 1984 இல் தொடர்பு கொள்ளவும். மேலும் BIS இணையதளம் www.bis.gov.in மற்றும் eBIS (manakonline.in) ஆகியவை BIS பற்றிய பொதுவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.