பொறியியல், அரசு கலைக்கலூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.. 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் பொன்முடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்..
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொன்முடி தெரிவித்தார். எனவே சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியான பிறகு 5 நாட்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. எனவே பி.இ. கலை அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி குறிப்பிடமால் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்..
மேலும் அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் உயர்கல்வி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்..