fbpx

ஒரே நேரத்தில் வருமான வரித்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் அதிரடி சோதனை..!

ஒரே நேரத்தில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரத்தை சேர்ந்த அரசு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை அவரது எஸ்.பி.கே நிறுவனத்தின் வாயிலாகப் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், செய்யாத்துரையின் நிறுவன கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் ஆடிட்டரின் நிறுவனமான மயிலாப்பூரில் உள்ள ஜி.பி.ஏ. கன்சல்டென்சி அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இந்த நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைக் கவனிக்கும் ஒரு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

அதிமுக மாஜி அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! 49  இடங்களில் சோதனை! போலீஸ் குவிப்பு | DVAC raids in AIADMK former minister  Kamaraj house and premises ...

இந்நிலையில், இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ஜி.பி.ஏ. கன்சல்டென்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொள்ளச் சென்றனர். இந்நிலையில், செய்யாதுரை வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாள் சோதனைக்காக அந்த அலுவலகத்திற்கு வந்ததால், அங்கே லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

அரசு ஒப்பந்ததாரரான செய்யாதுரையின் நிறுவனங்களுக்கும், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் இந்த ஜி.பி.ஏ. கன்சல்டன்சி நிறுவனம் தான் கணக்கு வழக்குகளைக் கவனித்து வருவது தெரியவந்துள்ளது. ஒரே நேரத்தில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

நடிகர் விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..?

Fri Jul 8 , 2022
நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக் கூடிய விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று மாலை விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அதேபோல் நாளை […]
சியான் விக்ரமின் ’கோப்ரா’ ட்ரெய்லர்..! வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் நிம்மதி..!

You May Like