நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக் கூடிய விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று மாலை விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக உள்ளது.
அதேபோல் நாளை மறுநாள் விக்ரமின் மற்றொரு படமான கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெள்யாகியுள்ளது.