fbpx

தமிழக பள்ளிகளில் இந்த நடைமுறை ரத்து.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

பள்ளிகளில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.. அதன்படி பள்ளிகளியேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் www.tnvelaivaaipu.gov.in என்ற இணையதளத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் வேலைவாய்ப்பு பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் ஆகியவற்றை இ சேவை மையங்களில் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. விருப்பம் உள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த ஆண்டு வரை 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, அவரவர் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டு, அனைவருக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமி: திரிணாமுல் காங். நிர்வாகி மகனின் அட்டூழியம்...!

Sat Jul 9 , 2022
மேற்கு வங்காள மாநிலம் நந்தியா மாவட்டம் ஹன்ஷகில் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சமரிந்திர கயாலி. திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான இவரின் மகன் பராஜ்கோபால் (21). பராஜ்கோபால் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளான். பிறந்தநாள் விழாவில் அதே கிராமத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி கலந்து‌ கொண்டார். இந்நிலையில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட சிறுமியை பராஜ்கோபால் மற்றும் அவனது […]

You May Like