fbpx

’மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் கவனத்திற்கு’..! போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு..!

சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சென்னை மற்றும் திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகம் பேருந்தை இயக்கி வருகிறது. எனினும், கொரோனா தொற்று பரவுதலை அறவே தவிர்த்திடும் பொருட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தவறாது பின்பற்றப்பட வேண்டும். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை தவிர்த்திடும் பொருட்டு அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் தமது பணியின்போது கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடித்தல் வேண்டும்.

’மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் கவனத்திற்கு’..! போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு..!

அதன்படி அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பணியின்போது பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணிக்க நடத்துனர் அறிவுறுத்த வேண்டும். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும். நடத்துனர்கள் பணியின்போது எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குதலை அறவே தவிர்த்திட வேண்டும். அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றுவதை உறுதி செய்தல் வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#Breaking : கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் சோதனை..

Sat Jul 9 , 2022
கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.. கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்கள் சட்டவிரோதமாக இந்தியா வருவதற்கு முறைகேடாக விசாக்கள் வழங்கியதாக சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. கடந்த மாதம் இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.. […]
’திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகள்’..!! காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி..!!

You May Like