fbpx

மப்டியில் வந்திருக்கேன் செயினையாவது கழட்டி கொடு… இல்லன்னா உள்ள தள்ளிடுவேன்…இளைஞரை மிரட்டிய நபர்…!

சென்னை, செங்குன்றம் அருகேயுள்ள பொன்னியம்மன்மேடு பகுதியிலுள்ள காமாட்சியம்மன் நகரில் வசித்து வருபவர் வேதநாதன் (23). இவர், நேற்று முன்தினம் அம்பத்தூர் செல்வதற்காக ஆவடி பஸ் நிலையத்தில் காத்திருந்தபொழுது அவரிடம் வந்து ஒருவர் தன்னை ஆவடி சப் இன்ஸ்பெக்டர் என்றும், மப்டி யில் இருப்பதாகவும் அறிமுகம் செய்துள்ளார்.

அதன் பிறகு உன்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி வேதநாதனை தனியாக அழைத்து சென்றுள்ளார். அங்கே, நீ ஒரு பெண்ணை கடத்திச் செல்வதற்காக வந்திருப்பதாக தகவல் வந்தது, அதனால் உன்னை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்கிறேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தேவநாதனிடம், உன்னை விட வேண்டும் என்றால் ரூ. 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசியுள்ளார்.

இதை கேட்டதும் வேதநாதன், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னதால், அப்படி என்றால் உன்னை கைது செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்று மிரட்டியுள்ளார். அதன் பின்னர் அந்த நபர், வேதநாதனை கைது செய்யாமல் இருக்க அவரது கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை கழற்றி தரும்படி கேட்டு வாங்கிச் சென்றுள்ளார்.

அதன் பிறகு யாரோ ஒருவர் தன்னிடம் காவல்துறை அதிகாரி போல் நடித்து தன்னை ஏமாற்றி சங்கிலியை பறித்து சென்றதை வேதநாதன் அறிந்தார்.  மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து  ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி குற்றப்பிரிவு போலீசார் ஏமாற்றி நகையை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

TET: தற்காலிக ஆசிரியர் பணி... மொத்தம் 28,984 பேர் மட்டுமே தகுதி...! பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தகவல்...!

Sun Jul 10 , 2022
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்காது, பள்ளி நிர்வாக குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணானது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், ‘தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான […]

You May Like