fbpx

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வைப்புதாரர்களா நீங்கள்..? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வைப்புதாரர்கள் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களுடன் சென்னை மாவட்ட வருவாய் அலுவலரை அணுகும்படி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை துவங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, ரூ.1,678 கோடி வரை வசூலித்துள்ளது. அவ்வாறு வசூலித்த பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு திரும்ப கொடுக்காமல், மோசடியில் ஈடுபட்டதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் ரெய்டு... 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் -  சீல் வைத்து நடவடிக்கை | Raid on Aarudhra Gold Company 3 crore 41 lakh  rupees confiscated – News18 Tamil

இந்த மோசடி வழக்கில், முன்ஜாமீன் கோரி ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டதால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பித்தர இயவில்லை என்றும், பணத்தை திரும்ப தர தயாராக இருப்பதாகவும் வாதத்தின்போது தெரிவித்திருந்தனர். இதனையடுத்து நிர்வாக இயக்குனர் ராஜசேகர் உட்பட 5 பேரையும் ஆகஸ்ட்  8ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், யாரிடமும் டெபாசிட் பெறக்கூடாது என ஆருத்ரா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

டெபாசிட் தாரர்களுக்கு பணம் திருப்பி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக உள்துறை செயலாளருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அலுவலரை நியமித்தும் உத்தரவிட்டு, பணத்தை திருப்பி வழங்கியது தொடர்பாக ஆகஸ்ட் 8ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

image

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், “ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் வைப்பீடு தொகை செலுத்தியவர்கள், தொகை செலுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம் டெபாசிட்களை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 முதல் மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

’திராவிடன் என்ற வார்த்தையை முதன்முதலில் குறிப்பிட்டவர்கள் ஆங்கிலேயர்கள்தான்’..! - ஆளுநர் ஆர்.என்.ரவி

Sun Jul 10 , 2022
தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். வேலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1806ஆம் ஆண்டு போராடி உயிர்நீத்த சிப்பாய்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “மதம், பொருளாதாரம், இடத்தின் காரணமாக ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்து ஆண்டனர். ஆங்கிலேயர்கள் ஆளும் முன்னர் பல மன்னர்கள் […]
’தமிழ் மக்கள் போல் தமிழில் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்’..! ஒருநாள் தமிழில் பேசுவேன்..! ஆளுநர்

You May Like