fbpx

’திராவிடன் என்ற வார்த்தையை முதன்முதலில் குறிப்பிட்டவர்கள் ஆங்கிலேயர்கள்தான்’..! – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

வேலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1806ஆம் ஆண்டு போராடி உயிர்நீத்த சிப்பாய்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “மதம், பொருளாதாரம், இடத்தின் காரணமாக ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்து ஆண்டனர். ஆங்கிலேயர்கள் ஆளும் முன்னர் பல மன்னர்கள் நம்மை ஆண்டார்கள். ஆனால், அந்த சமயம், மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சென்று வந்தனர். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே நாம் கல்வியில் சிறந்து விளங்கியிருந்தோம். வட இந்தியாவில் இருந்து மட்டும் மக்கள் இங்கு வரவில்லை. இங்கே இருந்தும் அறிவை வளர்க்க காசி போன்ற இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

RN Ravi, 'இது தான் இந்தியாவுக்கு தேவை!' - ஆளுநர் ஆர்.என்.ரவி பளீச்! - tamil  nadu governor rn ravi says integrated development is the current need of  india - Samayam Tamil

ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டார்கள். வரலாற்றை உற்றுநோக்கினால், விந்திய மலையை அடிப்படையாக வைத்துதான், நார்த்தில் இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும், தென்பக்கம் இருப்பர்களை திராவிடர்கள் என்றும் அடையாளப்படுத்தியிருக்கின்றனர். ஆங்கிலேயர்கள்தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள். தமிழ் மக்கள் போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாகும்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

மாணவியை கடத்திச் சென்று தனியாக குடும்பம் நடத்திய இளைஞர்..! காதல் வலையில் சிக்கியது எப்படி?

Sun Jul 10 , 2022
தட்டச்சு பயிற்சிக்கு சென்ற மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆசிரியரின் மகள் 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தினமும் தட்டச்சு பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று தட்டச்சு பயிற்சி வகுப்புக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவே இல்லை. இதனால் […]

You May Like