அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அதன்படி கட்சி பொருளாளர், கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. எனவே ஓ. பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.. ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்..
இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது “ 1974-ல் கிளைக்கழக செயலாளராக அதிமுகவில் இணைந்தேன்.. படிப்படியாக உயர்ந்து, இன்றை இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.. அதிமுக என்பது ஜனநாயக முறைப்படி நடக்கும் கட்சி.. அதிமுக வளர வேண்டும், செழிக்க வேண்டும், மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. தொண்டர்களின் எண்ணப்படி, கடுமையாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.. 31 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமை அதிமுகவுக்கு உண்டு..
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 ஆண்டு சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்.. அதிமுக ஆட்சியில் இருந்த போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது.. ஏதோ விபத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது.. ஆனால் இன்று தினமும், கொள்ளை, கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.. தமிழ்நாடு போதைப் பொருள் மாநிலமாக இருந்து வருகிறது.. முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை பற்றி கவலைப்படவில்லை.. தனது வீட்டில் உள்ள மக்களை பற்றி மட்டுமே அவர் கவலைப்படுகிறார்… ஸ்டாலினின் ஆட்சி குடும்ப ஆட்சி… எனவே இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டின் நிலை தற்போது தலைகீழாக மாறிவிட்டது.. வீட்டு வரி உயர்ந்துவிட்டது.. விரைவில் பேருந்து கட்டணம் உயரப்போகிறது.. கமிஷன், கலக்ஷன், கரப்ஷ்ன் ஆகியவற்றில் தான் அரசு கவனம் செலுத்தி வருகிறார்கள்..” என்று தெரிவித்தார்..