fbpx

#FlashNews : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு.. சட்ட விரோதமாக யாரும் கூடக்கூடாது என உத்தரவு…

ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்க்கொண்டதால் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்..

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. இந்த நிலையில் இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது..

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொள்வதால் பெரும் பதட்டம் நிலவுகிறது.. ஓபிஎஸ் வாகனத்தை அதிமுக தலைமை அலுவலகம் அருகே செல்ல முடியாத அளவிற்கு கல்வீச்சு தாக்குதல் நடைபெற்று வருகிறது. மேலும் கம்புகளை வீசியும் இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்..

இந்த மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.. 2 காவலர்கள் உட்பட 13 காயமடைந்த நிலையில், முதல் கட்டமாக இந்த பிரச்சனையை தீர்க்க, அதிமுக அலுவலகத்திற்கு காவல்துறையால் வருவாய் கோட்டாட்சியர் சென்றார்.. அப்போது ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் இருந்த நிலையில், அவரிடம் சீல் வைப்பதற்கான நோட்டீஸை வழங்கியதாகவும் தெரிகிறது.. பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.. மேலும் சட்டவிரோதமாக அதிமுக அலுவலகம் அருகே யாரும் கூடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்லது.. ஆனால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்..

Maha

Next Post

“ ஓபிஎஸ் தரம் தாழ்ந்த செயலை செய்துள்ளார்.. தொண்டர்கள் இதை ஏற்கமாட்டார்கள்..” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..

Mon Jul 11 , 2022
அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் நடைபெற்றது.. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை ரத்து என பல முக்கியமான தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அதன்படி கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட […]
’தினகரனோடு சேர்ந்து பாழாய்போன ஓபிஎஸ்’..! பாட்டு பாடி கலாய்த்த ஜெயக்குமார்..!

You May Like