சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது,
சென்னை தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சலகங்களின் முதல்நிலை கண்காணிப்பாளரால் ஜூலை 28 அன்று காலை 11 மணிக்கு கோட்ட அளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அஞ்சலகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர்கள், தங்களின் புகார்களை / ஆலோசனைகளை தபால், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் 18.07.2022-க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியாகராய நகர் தலைமை அஞ்சலகம், தியாகராய நகர் வடக்கு அஞ்சலகம், தியாகராய நகர் தெற்கு அஞ்சலகம், இந்தி பிரச்சார சபா, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம், மந்தைவெளி அஞ்சலகம், விவேகானந்தா கல்லூரி அஞ்சலகம், கிரீம்ஸ்சாலை அஞ்சலகம், சாஸ்திரிபவன் அஞ்சலகம், டிபிஐ வளாகம் அஞ்சலகம், உள்ளிட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ளது. புகார்கள் அல்லது ஆலோசனைகள் அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி dochennaicitycentral.tn@indiapost.gov.in பயன்படுத்தலாம். மேலும் வாட்ஸ்அப் எண்-94442 51587 மூலம் புகார் தெரிவிக்கலாம் என சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சலகங்களின் முதன்மை கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.