அஞ்சல் ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் 18-ம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்…! இல்லை என்றால் சிக்கல்…!

சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது,

சென்னை தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சலகங்களின் முதல்நிலை கண்காணிப்பாளரால் ஜூலை 28 அன்று காலை 11 மணிக்கு கோட்ட அளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அஞ்சலகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர்கள், தங்களின் புகார்களை / ஆலோசனைகளை தபால், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் 18.07.2022-க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகராய நகர் தலைமை அஞ்சலகம், தியாகராய நகர் வடக்கு அஞ்சலகம், தியாகராய நகர் தெற்கு அஞ்சலகம்,  இந்தி பிரச்சார சபா, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம்,  மந்தைவெளி அஞ்சலகம், விவேகானந்தா கல்லூரி அஞ்சலகம், கிரீம்ஸ்சாலை அஞ்சலகம், சாஸ்திரிபவன் அஞ்சலகம், டிபிஐ வளாகம் அஞ்சலகம், உள்ளிட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ளது. புகார்கள் அல்லது ஆலோசனைகள் அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி dochennaicitycentral.tn@indiapost.gov.in பயன்படுத்தலாம். மேலும் வாட்ஸ்அப் எண்-94442 51587 மூலம் புகார் தெரிவிக்கலாம் என சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சலகங்களின் முதன்மை கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

Also Read: TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும்…! அரசு அதிரடி உத்தரவு…!

Vignesh

Next Post

தவறுதலாக கூட குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க... பல ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படலாம்..

Tue Jul 12 , 2022
குளிர் பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பை என்று தெரிந்தாலும், அவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது… வீடு, அலுவலகம், பார்ட்டி என எல்லா இடங்களிலும் மக்கள் குளிர்பானம் அருந்துவதைக் காணலாம். ஆனால் குளிர் பானங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை குறிப்பாக குழந்தைகளுக்கு குளிர்பானங்களை கொடுக்கவே கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.. குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால், அது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். […]

You May Like