தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெறும் முறை கைவிடப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள்ப்பட்டுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி செய்யும் பொருட்டு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது இ-சேவை மையத்தையோ அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் https://tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவ மாணவியர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மேற்படி பதிவுகள் மேற்கொள்ளும்போது அரசு விதித்துள்ள கொரானா வழிமுறைகளான சமூக இடைடுவளி பின்பற்றுதல், முக்கவசம் அணிதல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திட அறிவுறுத்தல் போன்றவைகளை கடைபிடித்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது.