fbpx

நாடாளுமன்றத்தில் இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது..! மக்களவை செயலகம் அதிரடி..!

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், ”வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

Parliament House of India - Facts, History, Time to visit.

இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனி பயன்படுத்தக் கூடாது. முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்தினால் சபை தலைவர்கள், சபை குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள்.

Chella

Next Post

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..! என்ன காரணம்?

Thu Jul 14 , 2022
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுமுறைப் பயணமாக அடுத்த வாரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சென்னையில், நடக்க உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் […]
செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி..! பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

You May Like