விஜயாப்புரா அருகே கோல்லாரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சோம்நாத் (26). இவர் விஜயாப்புரா டவுனில் உள்ள கார் மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அந்த மெக்கானிக் ஷாப்பிற்கு சப்-இன்ஸ்பெக்டரான சோமேஸ் கெஜ்ஜி என்பவர் அவர் காரை சரி செய்ய அந்த மெக்கானிக் ஷெட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அவர் காரில் இருந்த ரூ.1 லட்சம் ரூபாய் கானாமல் போனதாக தெரிகிறது. என்வே அந்த பணத்தை சோம்நாத் எடுத்துவிட்டதாக கூறி அவரை ஏ.பி.எம்.சி. காவல் நிலையத்திற்கு சோமேஸ் அழைத்து சென்றுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சோம்நாத்தை, சோமேஸ் மற்றும் மேலும் மூன்று சப்-இன்ஸ்பெக்டர்கள் சேர்ந்து அடித்துள்ளனர். மேலும் ஒரு லட்ச ரூபாயை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த சோம்நாத் அவர் அந்த பணத்தை எடுக்கவில்லை என்றும், இருந்தும், எனக்கு திருட்டு பட்டம் கட்ட காவல்துறையினர் முயற்சி செய்வதாக கூறி, செல்போனில் பேசி வீடியோ வெளியிட்டார். பிறகு கோல்லாரா கிராமத்தில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் குதித்து, சோம்நாத் தற்கொலை செய்து கொண்டார்.