fbpx

நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்? ’இரவின் நிழல்’ படத்தின் நடிகை பிரிகிடா ஓபன் டாக்..!

இரவின் நிழல் படத்தில் வரும் நிர்வாணக் காட்சியில் எப்படி நடித்தேன் என்கிற அனுபவத்தை நடிகை பிரிகிடா ஓபனாக பேசியுள்ள பேட்டி டிரெண்டாகி வருகிறது.

ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் ‘பவி டீச்சர்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் நடிகை பிரிகிடா. இவர் தற்போது, நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான ’இரவின் நிழல்’ படத்தில் மெயின் லீடாக நடித்துள்ளார். சில இன்டிமேட் சீன்கள் மற்றும் அந்தவொரு நிர்வாணக் காட்சியில் எப்படி நடித்தேன் என்கிற அனுபவத்தை பிரிகிடா ஓப்பனாக பேசியுள்ள பேட்டி டிரெண்டாகி வருகிறது.

பிரிகிதா Photos & Images # 6098 - Filmibeat Tamil

பார்த்திபனின் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான ’இரவின் நிழல்’ வரும் 15ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பார்த்திபனின் அசாதாரண முயற்சியை வியந்து பாராட்டி உள்ளார். ஏற்கனவே, இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச விருதுகள் குவிந்து வரும் நிலையில், படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆஹா கல்யாணம் என்கிற தொடரில் பவி டீச்சராக நடித்த பிரிகிடாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குவிந்துள்ளனர். பவி டீச்சராக காதலை உருக்கி சொன்ன விதத்தில் அசத்திய பிரிகிடாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிய சென்ற இவருக்கு ஹீரோயின் ரோலையே வழங்கி இருக்கிறார் பார்த்திபன்.

Pavi Teacher Brigida Open Talk About Naked Scene in Iravin Nizhal

தனது ரோலுக்கு மற்றவர்களையே அவர் ஆடிஷன் செய்ததாகவும், கடைசியில் பிரிகிடாவே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், முழு முயற்சியையும் போட்டு நடித்துள்ளதாகவும், ஏகப்பட்ட மெனக்கெடல்கள், 19 நொடிகளில் ஓடிக்கொண்டே ஆடையை மாற்றி நடிக்க வேண்டிய சூழல், இன்டிமேட் காட்சிகளில் நடிக்க பெரும் சிரமப்பட்டது உள்ளிட்ட பலவற்றை பேட்டி ஒன்றில் பேசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். இரவின் நிழல் படத்தில் உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணக் கோலத்தில் எப்படி நடிச்சீங்க என்கிற கேள்விக்கு ரொம்பவே கூச்சப்பட்டு பதில் கூறியுள்ளார் பிரிகிடா. சேலை அணிந்து சென்றாலே சரியாக இருக்கிறதா? என பலமுறை சரி செய்யும் பெண் தான் நான். ஆனால், அந்த கதாபாத்திரம் ரொம்பவே புனிதமானது. அதற்கு அப்படியொரு விஷயம் நடக்கும் போது, அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரிய வைத்தார். ஆனால், இதை என் பெற்றோர்களிடம் எப்படி சொல்வது என்பது எனக்கு பெரிய நெருடலாக இருந்தது.

Brigida Saga (Pavi Teacher) Biography, Age, Family & Movies - MixIndia

எனது கதாபாத்திரம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறி விட்டு இப்படியொரு சீனும் இருக்கு, அது இருந்தால் தான் அந்த கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கும் என பெற்றோரிடம் எடுத்துக் கூறினேன். பார்த்திபன் சாரும் வந்து பேசினார். பின்னர், அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், அந்த காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் அந்த காட்சி நிச்சயம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும், அது கவர்ச்சியாக இருக்காது. அங்கே புனிதம் மட்டுமே தெரியும் என இந்த படம் எனக்கு இத்தனை சீக்கிரம் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு என்று பேசி உள்ளார்.

Chella

Next Post

பிக்பாக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கேட்ட சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? அதிர்ச்சியில் டிவி நிர்வாகம்..!

Thu Jul 14 , 2022
இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கான் கேட்ட சம்பளத் தொகையால் டிவி நிர்வாகமே ஆடிப்போயிருக்கிறது. நடிகர் சல்மான் கான் கடந்த 13 ஆண்டுகளாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த சீசனை தொகுத்து வழங்க சல்மான் கான் கேட்கும் கட்டணம் டிவி நிர்வாகத்தையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. ஏற்கனவே கொடுத்த தொகையைவிட கூடுதலாக […]
பிக்பாக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கேட்ட சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? அதிர்ச்சியில் டிவி நிர்வாகம்..!

You May Like