நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. கொரோனா நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.. இந்த நிலையில் இந்தியாவில் 18 வயதுகு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பூஸ்டர் டோஸ்களை வழங்குவதாக மத்திய அறிவித்துள்ளது. அதன்படி இன்று (ஜூலை 15) முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் கோவிட் டோஸ்கள் கிடைக்கும்.
இன்று முதல் 75 நாட்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக கிடைக்கும். நாடு விடுதலைபெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி 75நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. அதன்படி ஜூலை 15 முதல் 75 நாள் இலவச தடுப்பூசி பிரச்சாரம் நடத்தப்படும், இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் அரசு மையங்களில் இலவச தடுப்பூசி பூஸ்டர் டோஸ் வழங்கப்படும்.
கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான தகுதி : மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து பயனாளிகளும் பூஸ்டர் டோஸுக்கு தகுதியுடையவர்கள். 18-59 வயதுக்குட்பட்டவர்கள் 75 நாள் சிறப்பு இயக்கத்தின் கீழ் அரசு தடுப்பூசி மையங்களில் கோவிட் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாகப் பெறலாம்..
Cowin போர்ட்டலில் அல்லது ஆரோக்யா சேதுவைப் பயன்படுத்தி ‘முன்னெச்சரிக்கை டோஸ்’ பதிவு செய்வது எப்படி
- cowin.gov.in அல்லது Aarogya Setu செயலியை திறந்து, Cowin தடுப்பூசி என்ற டேபை தட்டவும்.
- முந்தைய தடுப்பூசி பதிவுக்கு பயன்படுத்திய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவும். பின்னர் OTP ஐ உள்ளிடவும். Cowin போர்ட்டலில் ஒரே மொபைல் எண்ணைப் பயன்படுத்தி 4 பேர் வரை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
- இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், முதலில் தங்களைப் பதிவு செய்து கொண்டு முதல் இரண்டு டோஸ்களைப் பெற வேண்டும்.
- முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை டோஸுக்கு தகுதியானவர்கள், Appointments என்ற தொகுதியில் முன்னெச்சரிக்கை டோஸிற்கான ஸ்லாட்டுகளை கணினி காண்பிக்கும்.
- ‘Precaution Dose ‘ டேபை தட்டவும், பின்னர் அப்பாயிண்ட்மெண்ட்டை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் இருப்பிடம், பின்கோடு போன்றவற்றின் அடிப்படையில் அப்பாயிண்ட்மெண்ட்டைத் தேர்வுசெய்து, முன்பதிவு நேரத்தைத் தட்டவும்/கிளிக் செய்யவும். அப்பாயிண்ட்மெண்ட் உறுதிசெய்யப்பட வேண்டும் மற்றும் விவரங்களை செயலியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.