1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரும் தொழிலதிபருமான ரிபுத் மன் சிங் மாலிக் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
1985 ஆம் வருடம் ஏர் இந்திய விமானம் கனிஷ்கா குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 325 பயணிகள் உயிரிழந்தனர்.. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ரிபுத் மன் சிங், வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் இந்தியா வருவதற்கு நிரந்தர தடை விதிக்கப் பட்டிருந்தது. 2020 இல் அத்தடை நீக்கப்பட்டு விசா வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவர் கனடாவில் உள்ள சர்ரே. பிசி என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவரைக் கண்டனர். அந்த நபர் ரிபுத் மன் சிங் என்பது தெரியவந்துள்ளது.. காயமடைந்த நபருக்கு அதிகாரிகளால் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. போலீசார் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இதனிடையே ரிபுத் மன் சிங் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தகவலை அவரின் குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்..