fbpx

கள்ளக்குறிச்சி கலவரம்..! 2 நாட்களுக்கு முன்பே எச்சரித்த உளவுத்துறை..! கண்டுகொள்ளாத மாவட்ட காவல்துறை..!

கள்ளக்குறிச்சி வன்முறை நடைபெறுவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த 17ஆம் தேதி தனியார் பள்ளியில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்நிலையில், வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஜூலை 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகத்தை மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது. மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது என ஜூலை 15ஆம் தேதியே உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த கலவரத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கலவரம்..! 2 நாட்களுக்கு முன்பே எச்சரித்த உளவுத்துறை..! கண்டுகொள்ளாத மாவட்ட காவல்துறை..!

ஆனால், மாவட்ட காவல்துறை இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இதனை வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது மாவட்ட காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் இடையே பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டதாலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இந்த கலவரம் ஏற்பட்டதாக மாவட்ட காவல்துறைக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் உளவுத்துறை கொடுத்த அறிக்கையை, சிறப்பு காவல் ஆய்வாளர் மாவட்ட எஸ்பியிடம் உரிய முறையில் கவனத்திற்கு கொண்டு சென்றாரா? என்பன குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

Chella

Next Post

விடுமுறை விவகாரம்.! 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கையா? மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் விளக்கம்..!

Thu Jul 21 , 2022
விடுமுறை விவகாரத்தில் 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் கடந்த 17ஆம் தேதி அறிவித்தது. இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் […]

You May Like