உத்தரப்பிரதேசத்தில் இரண்டு வாரங்களாக காணாமல் போன பெண் ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை காவல்துறையினர் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரதாப்கரில் கோட்வாலி கன்ஷிராம் காலனியில் வசித்து வந்த திருமணமான 22 வயது பெண் ஜூலை 12 ஆம் தேதி காணாமல் போனார். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் காணாமல் போன பெண்ணை தேடி வந்தனர். இதற்கிடையில் காணாமல் போன பெண் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர், மேலும் ஒருசிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.