fbpx

டெல்லிக்கு செல்லும் இளையராஜா; மாநிலங்களவை உறுப்பினராக நாளை பதவியேற்பு..!

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமூக சேவை ,கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமன எம்.பி.க்களாக மாநிலங்களவைக்கு ஜனாதிபதி நியமிக்கலாம். அதனடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜேந்திர பிரசாத், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கள் கிழமை அன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பதவியற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் இளையராஜா பதவி ஏற்கவில்லை . அப்பொழுது அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றதால் அவரால் அன்று பதவி ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.ஆக நாளை பதவி ஏற்க இருக்கிறார். எனவே இன்று அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Rupa

Next Post

சீன படகு வேதாரண்யத்தில் கரை ஒதுங்கியது எப்படி.. நாகையில் பரபரப்பு..!

Sun Jul 24 , 2022
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முனாங்காடு பகுதியில், காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு ஒன்று இன்று காலை கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவலறிந்த கடலோர காவல்படை காவல்துறையினர், விரைந்து வந்து அந்த ரப்பர் படகை சோதனையிட்டனர். சேதனை சொய்ததில் அந்த படகு சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் கரை ஒதுங்கிய அந்த படகு பதிமூன்று அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்டது. அந்த படகில், படகு துடுப்பு, […]

You May Like