fbpx

அடி தூள்… Group- 1 பணிக்கு வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…! மொத்தம் எத்தனை காலியிடங்கள்…? முழு விவரம் உள்ளே…

மொத்தம் காலியாக உள்ள 92 குரூப் – 1 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; துணை ஆட்சியர் பணிக்கு 18 இடங்கள், டி.எஸ்.பி பணிக்கு 26 பணியிடங்கள், வணிக வரி உதவி கமிஷனர் பணிக்கு 25 காலியிடங்கள், கூட்டுறவு துணை பதிவாளர் பணிக்கு 13 காலியிடங்கள், ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் பணிக்கு 7 காலியிடங்கள் , மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி பணிக்கு 3 காலியிடங்கள் என மொத்தம் 92 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு, ஆரம்ப கட்ட மாத சம்பளமாக, 56,100 ரூபாய்; அதிகபட்சமாக  2,05,700 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வுக்கான ஆன்லைன் வழி விண்ணப்பப் பதிவு,தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய, ஆகஸ்ட் 29-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

முதல்நிலை தேர்வு முடிவுகள், இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும். அதில் தேர்ச்சி பெறுவோர், அடுத்த ஆண்டு மார்ச்சில் நடக்கும் பிரதான தேர்வில் பங்கேற்க வேண்டும். பிரதான தேர்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும். அதன் முடிவுகள் அடுத்த ஆண்டு ஜூலையில் வெளியாகும்.பிரதான தேர்வில் தேர்ச்சி பெறுவோர், 1:2 என்ற விகிதத்தில், நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் நேர்காணல் நடத்தி, இறுதி பட்டியல் வெளியிடப்படும். முதல் நிலை தகுதி தேர்வு, மாநிலம் முழுதும் 38 நகரங்களில் நடத்தப்படும். பிரதான தேர்வு, சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் மட்டுமே நடத்தப்படும். குரூப் – 1 தேர்வு எழுதுவோருக்கு தமிழ் மொழியை பற்றிய புரிதல் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு, பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பில் இறுதியாண்டில் இறுதி தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\

Also Read: Google… வெளியிட்ட சூப்பர் அப்டேட்… இந் நீங்க யூடியூப்பில் லைவ்  லைவ்ஸ்ட்ரீம் செய்யலாம்….!

Vignesh

Next Post

ஐயோ... இந்தியாவில் பரவத் தொடங்கிய குரங்கு வைரஸ் காய்ச்சல்...! மீண்டும் மக்களுக்கு அதிகரிக்கும் கட்டுப்பாடு...!

Tue Jul 26 , 2022
கேரளா மற்றும் புதுதில்லியில் குரங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்துள்ளதையடுத்து, தமிழக சுகாதாரத் துறையினர் மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சர்வதேச இடங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளைத் ஸ்கிரீனிங், மாநிலத்தில் உள்ள நான்கு விமான நிலையங்களிலும் கண்காணிப்புக் குழுக்களை சுகாதாரத் துறை அமைத்துள்ளது. கேரளாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் வளைகுடா நாடுகளில் இருந்து வந்தவர்கள். பல நாடுகளில் ஏராளமான புலம்பெயர்ந்தோர் பணிபுரிந்து வருகின்றனர். தாய் […]

You May Like