ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடப்பதால் ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்… இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
.