கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக 4 மாதங்களுக்கு ஒருமுறை கொரோனாவின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது..

கடந்த சில வாரங்களாக COVID-19 தொற்று காரணமாக ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.. குறித்து எச்சரிக்கை எழுப்பியுள்ளது. உலக சுகாதார அமைப்பு தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த ஐந்து வாரங்களாக கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. மேலும் பல நாடுகளில் ஓமிக்ரான் துணை வகைகளால் இயக்கப்படும் பரவல் அலைகளைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. எனவே பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்க கூடாது.. கொரோனா வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்..
சில நாடுகளில் 70 சதவீத தடுப்பூசி கவரேஜை எட்டியிருந்தாலும், கணிசமான எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் பிற ஆபத்தில் உள்ள குழுக்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால், இறப்புகள் ஏற்படும். தொடர்ந்து, சுகாதார அமைப்புகள் அழுத்தத்தின் கீழ் இருக்கும் மற்றும் உலகளாவிய மீட்பு ஆபத்தில் இருக்கும்…” என்று தெரிவித்தார்..