fbpx

வரும் 1-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில், ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர்‌, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, சேலம், கரூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூார்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌ மற்றும்‌ திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 31-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருச்சி, தஞ்சாவூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர்‌, நாமக்கல்‌, புதுக்கோட்டை, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, விழுப்புரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.
பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, திருச்சி மற்றும்‌ தஞ்சாவூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர்‌, நாமக்கல்‌, புதுக்கோட்டை, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, விழுப்புரம்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

வரும் 31, 1 ஆகிய தேதிகளில் குமரிக்கடல்‌ பகுதி மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுததிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌….” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை.. திமுக - பாஜக கூட்டணியா..?

Fri Jul 29 , 2022
தமிழக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக தொடங்கியது.. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழா முடிந்ததும் ஆளுநர் மாளிகைக்கு சென்ற மோடி, அங்கு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். […]

You May Like