fbpx

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை.. 2 நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யுமாம்..

தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில், ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 31-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சேலம், நாமக்கல் திருச்சி, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி மாவட்டங்கஈல் ஓரிரு இடங்களில்‌ கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர, திருவாரூர்‌, அரியலூர்‌, மயிலாடுதுறை, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கரூர்‌, நாமக்கல்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்‌, சென்னை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 2-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ராணிப்பேட்டை, திருவள்ளுர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக
கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மற்றும்‌ சென்னை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை….” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர்; பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்...!

Fri Jul 29 , 2022
அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அங்குள்ள ஆசிரியர்களாளேயே அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது. தற்பொழுதுகோவை அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்குபாலியல் தொந்தரவு செய்வதாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். கோவை சுகுணாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிரபாகரன் என்பவர் உடற் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக […]

You May Like